User:Njaanamuni
விமரிசனம்: From: JayBee <suganjb@p...> Date: Mon May 27, 2002 10:28 am Subject: Re: [agathiyar] Re: ஒளவைக் குறள் - அறிமுகம்
அன்புள்ள தம்பி ஞானவெட்டியான்,
ஒரு யோசனை. நீங்கள் ஒளவைக்குறளைப் பற்றி எழுதும் மடல்களையும் அவற்றின் தொடர்பாக ஏற்படும் மடலாடலையும் தொகுத்துத் தனியாகச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். ஃப்லாப்பியில் ஒரு பிரதி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி முடிக்கும்போதெல்லாம் அப்படியே நெட்ஸ்கேப் காம்போஸர் போன்றவற்றில் போட்டுத் தயார் செய்து ஜியோஸிட்டீஸ், ட்ரைப்பாட் மாதிரி இடங்களில் வெப்சைட் ஏற்படுத்திக் கொண்டே வரலாம். இவற்றைப் பார்ப்பதற்காக ஆவணத்தில் தேட வேண்டியிருக்காது. பின்னால் இதையெல்லாம் ஸீடீயாக வெளியிடுவதற்கு வசதியாக இருக்கும். அந்த வலைப்பக்கம் இருக்கும் யூர்எல்லை உங்கள் மின்னஞ்சல்களில் வருமாறு செய்து கொள்ளலாம். நான் தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைத் தேடிக் கொண்டிருப்பதாலேயே என் அனுபவத்தை வைத்து உங்களுக்கு இந்த யோசனையைச் சொல்கிறேன்:-) அன்புடன் ஜெயபாரதி
From: "sarabeswar"
<sarabeswar@y...> Date: Mon May 27, 2002 2:48 pm Subject: Re: ஒளவைக் குறள் - அறிமுகம் "தமிழை ஆதாரமாகக் கொண்டு பீசத்தைத் தமிழிலிருந்தும் ஒலியை செங்கிருதத்திலிருந்தும் எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக் கிரந்தம் என்னும் மொழியை உண்டாக்கினார்கள். தமிழையே ஆதாரமாகக் கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தியிருக்கும் ஞானிகளின் போக்குகளை, நாம் அநுபவித்துத்தான் உணரமுடியுமே தவிர, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப் படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று. அதனால், ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால் ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே எதிர்பார்க்கும் மற்றவர்கள் கதி(மூச்சோட்டம்)யினாலேற்படும் குற்றத்தையும் அடைவர்."
நெத்தி அடியான கருத்துக்களை முன்வைத்திருக்கும் ஞானவெட்டியான் அவர்களை வாழ்த்தி வணங்கிப்பணிகிறேன். ஐயா, எம்போன்ற குறைகுடங்களுக்கு ஆசி நல்கவும். தங்களைப் போன்ற மெய்ஞானியர் எழுதுவது இந்த அவைக்கு மேலும் சிறப்பினைச் சேர்த்து வருகிறது. அன்புடன் வணங்கி, குமார்
Subject: [agathiyar] Re: ஒளவைக் குறள் - அறிமுகம் Date: Tue, 28 May 2002 12:52:57 +0530 From: ஞானவெட்டியான்
அன்பு நண்பர் திரு.குமார் அவர்கட்கு, வணக்கம். "ஐயா, எம்போன்ற குறைகுடங்களுக்கு ஆசி நல்கவும்."
எப்பொழுது குறைகுடமென உணர்ந்தோமோ அப்பொழுதே இறைவனின் பூரண ஆசி நமக்குக் கிட்டிவிடும். ஏனெனில், குறை நிறையாக நிறைய வாய்ப்புள்ளது. ஆனால், நாம் நிறையென்று உணர்ந்துவிட்டால் கொள்ள இடமில்லையே! என் செய்வது?
"தங்களைப் போன்ற மெய்ஞானியர் எழுதுவது இந்த அவைக்கு மேலும் சிறப்பினைச் சேர்த்து வருகிறது."
நானோர் பரதேசி (பரம்+தேசி). என் சக்தி (energy,wife) வரையில் சம்சாரி. இல்லாருக்கு உபதேசி. இருப்போரைக் கண்டால் சுகவாசி. இப்பரதேசிக்கு அகத்தியர் குழுவால்தான் சிறப்பு. ம்!..ம்!. சிறப்பு கூட வராதே! செயலின் விளைவல்லவோ கூட வரப்போவது? இப்போது மனுவுக்குத் தேவை செயல்! செயல்! நன்றி
ஞானவெட்டியான் திண்டுக்கல்(தமிழகம்)